ஒருவன் இரண்டு அடி முன்னோக்கித் தாவ வேண்டுமானால் அதற்கு முதலில் அவன் நான்கு அடி பின்னோக்கிச் செல்லவேண்டும். அப்போதுதான் அவனால் இந்த இரண்டடியை ஒரே மூச்சில் தாவிக் கடக்க முடியும். வில்லில் நாண் எந்த அளவுக்குப் பின்னோக்கி இழுத்துவிடப்படுமோ அந்த அளவிற்கு அம்பினை முன்னோக்கி அது செலுத்தும். வாழ்க்கையில் எந்த அளவு துன்பங்களை ஏற்க நாம் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் நம்மால் பெற முடியும். குழந்தையைப் பெற வேண்டுமானால் பிரசவ வேதனையை அனுபவித்தே தீர வேண்டும். ஒரு வெற்றியை அடைய வேண்டுமானால் ஒரு போராட்டத்தை நடத்தியே தீரவேண்டும். தோல்வியே இல்லாமல் எடுத்த எடுப்பில் வெற்றி கண்ட பலரும் ஒரு தோல்வி வந்ததுமே தாள முடியாமல் துவண்டு விடுகின்றனர். அவ்வாறில்லாமல் பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றி கண்டவர்களே அந்த வெற்றியைக் கடைசிவரை தக்கவைத்துக் கொள்கின்றனர். நம்பிக்கை என்ற வெளிச்சம் நமக்குள் இருக்கிறது. யானைக்குத் தன் பலம் என்ன என்று தெரியாது. அதனால்தான் 50 கிலோ எடை கொண்ட மனிதன் அதன் மேல் ஏறி அமர்ந்து அதனை அதிகாரம் செய்து கொண்டு, சவாரி செய்துகொண்டு இருக்கிறான். அதைப்போல் இல்லாமல் உங்கள் பலத்தைப் பற்றி நீக்களே எடை போடத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி உங்களை நீங்களே உணர்ந்து கொண்டால் உங்களுக்கு இனி எல்லாமே வெற்றிதான்.
இனி எல்லாம் வெற்றிதான்
- Brand: கார்த்தீபன்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹160
Tags: ini, elam, vetrithaan, இனி, எல்லாம், வெற்றிதான், கார்த்தீபன், Sixthsense, Publications