சமீபத்தில்,
நமக்குள் ஏற்படுகின்ற பயத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று நீங்கள்
கூறியதைக் கேட்டேன். நீங்கள் கூறுவதை நான் நம்பவில்லை. பல ஆண்டுகளாக நான்
எனக்குள் ஏற்படுகின்ற பயத்தை எதிர்த்துப் போராட முயற்சி மேற்கொண்டேன்.
அப்போது எனது பயம் இன்னமும் அதிக மாகவும், பலமுள்ளதாகவும் ஆகிவிட்டது.
இப்போது எனக்குள் பயம் ஏற்பட்டால், அந்த பயத்தினுள் நான் எந்தவிதமான
பாதுகாப்பும் இல்லாமல் அதனுள் செல்கிறேன். அதில் அப்படியே இருக்கிறேன்.
எதுவுமே செய்யாமல், அப்போதுள்ள சூழ்நிலைப்பற்றி எந்தவிதமான தீர்மானங்களும்
இல்லாமலே கூட, எனது பயத்தினுள் சென்று பார்க்கிறேன். பயம் என்பது ஒரு
மாபெரும் சக்தி என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். மேலும் சில
வேளைகளில் நான் இந்த சக்தியை சந்தோஷமாக அனுபவிக்கிறேன். பத்தடி பலகையில்
நின்று கொண்டு ஏரியின் தண்ணீரில் தலைகீழாகப் பாய்ந்து குதிப்பதைப் போன்று
குதிக்கிறேன். எனவே பயத்தோடு போராடுவது குறித்தும், பயத்தை நேருக்கு நேர்
எதிர்கொள்வது குறித்தும் தாங்கள் பேச முடியுமா?
நான் கூறுவதை நீ நம்பாமல் இருப்பது மிகவும் நல்லது. இப்போது நான் பெரிய
பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன்; ஏனெனில் நான் சொல்வதை நீ
நம்பினால்,
இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 4)-Innoru Vaasal Innoru Vazhkkai Part 4
- Brand: ஓஷோ
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹150
Tags: innoru, vaasal, innoru, vazhkkai, part, 4, இன்னொரு, வாசல், இன்னொரு, வாழ்க்கை, (பாகம், 4)-Innoru, Vaasal, Innoru, Vazhkkai, Part, 4, ஓஷோ, கவிதா, வெளியீடு