இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை. வெளிவந்தைவையும் ஓர் ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை. அவற்றில் இடம் பெறும் பெண்கள் மங்கலான சித்திரங்கள் மட்டுமே. சல்மாவின் இந்த நாவல் இஸ்லாமிய பெண்ணுலகைப் பெண்ணின் கண்களால் பார்க்கிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் ரகசியங்களையும் இச்சைகளையும் அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் அவர்கள் அடைய விரும்பும் சுதந்திரத்தையும் காதலையும் காமத்தையும் பிறழ்வுகளையும் உடலியல் துன்பங்களையும் சுரண்டல்களையும் நுட்பமாகவும் சமயங்களில் பகிரங்கமாகவும் பகிர்ந்து வைக்கிறது. பெண் தன்னைப் பெண்ணாக உணர்வது ஆண்கள் அயர்ந்திருக்கும் இரண்டாம் ஜாமத்தில் என்று வெளிப்படுத்துகிறது. ஒருவகையில் இந்தப் பெண் நோட்டம் ஆணைத் தொந்தரவு செய்யக் கூடியது. இந்தப் பார்வை தமிழ்ப் படைப்பில் புதிது. This novel takes us to the closured world of Muslim women. A very controversial novel translated into several Indian and World languages.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Irandaam Jaamankalin Kathai இரண்டாம் ஜாமங்களின் கதை

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹600


Tags: Irandaam Jaamankalin Kathai இரண்டாம் ஜாமங்களின் கதை, 600, காலச்சுவடு, பதிப்பகம்,