சைறில் அன்வர் (1922-1949) நவீன இந்தொனேசிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவர் வாழ்ந்த காலமும் குறைவு அதுபோல் அவர் எழுதியவையும் குறைவு. அவர் இறக்கும்போது அவருக்கு இருபத்தேழு வயது நிறையவில்லை. மொத்தமாக சுமார் எழுபது கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இன்றுவரை அன்வர்தான் இந்தொனேசியாவின் தலையாய நவீன கவிஞராகக் கருதப்படுகிறார். இந்தொனேசிய பள்ளிமாணவர்கள் யாவரும் அவரை அறிவர். அவரது புகழ்பெற்ற கவிதையான அக்கு (நான்) இந்தொனேசியாவில் பொது இடம் ஒன்றில் பெரிய போஸ்ட்டரில் எழுதி ஒட்டப்பட்டிருப்பதை நான் ஒரு இணையதளத்தில் பார்த்தேன். இறந்து அரை நூற்றாண்டுக்குப் பிறகும் ஒரு கவிஞனுக்கு தனது நாட்டில் இத்தகைய கௌரவம் கிடைப்பது ஆபூர்வம். - எம். ஏ. நுஃமான்
இரவின் குரல்-Iravin Kural
- Brand: சா.கந்தசாமி
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹55
Tags: iravin, kural, இரவின், குரல்-Iravin, Kural, சா.கந்தசாமி, கவிதா, வெளியீடு