இந்த இரவில்
இப்புவியில்
எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !
காட்டில் கரிய பெரும் யானைகள்
மண்ணுக்குள் எலிகள்
நீருக்குள் மீன்கள்
பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்
நாளைய புவி
இங்கே கரு புகுகிறது
நிறைவுடன்
சற்றே சலிப்புடன்
பெருமூச்சு விட்டுக் கொண்டு
திரும்பிப் படுக்கிறது
இரவு
Tags: iravu, இரவு, -, Iravu, ஜெயமோகன், விஷ்ணுபுரம், பதிப்பகம்