வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை. மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது. எந்த மேற்பூச்சும் வசீகரமுமற்ற இந்த எழுத்து நம் ஜீவனைப் பற்றி இழுக்கிறது. அதன் அப்பழுக்கற்ற, பரிசுத்தமான வாழ்வின் உண்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. காலம் கொஞ்சமு கொஞ்சமாய் தன் கண்முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம். டி. வி. இந்நாவலில் அப்படியே பதிவு செய்கிறார். ஏனெனில் இது அவரின் சொந்த வாழ்வு. துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன?
இறுதி யாத்திரை-Iruthi Yathirai
- Brand: கே.வி. ஷைலஜா
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200
Tags: iruthi, yathirai, இறுதி, யாத்திரை-Iruthi, Yathirai, கே.வி. ஷைலஜா, வம்சி, பதிப்பகம்