மழலையர் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி மருத்துவம்,
பொறியியல் படிப்பது வரையிலான எல்லாவற்றிற்கும் வழிகாட்டிகள்
கிடைக்கின்றன. இதற்கு முன் கேட்கப்பட்ட கேள்விகள்
இவைதான்..இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து வைத்துக்
கொண்டால் இனிமேல் வருவதை எளிதாக எதிர் கொள்ளலாம்
என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற இதைப் போன்ற துணைவன்கள்
கிடைக்கின்றனவா? படிக்கும் போது பல சாதனைகளைப்
புரிந்தவர்கள் கூட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை
அடைய முடியாமல் தவிக்கிறார்களே.
அனால் நீங்கள் படிக்கவே இல்லை என்றாலும் கூட பணமே இல்லை
என்றாலும் கூட ஏதாவது ஒரு முயற்சியைத் தொடங்கலாம்.
அது வணிகமாக இருக்கலாம். சேவையாக அமையலாம்.
அதுவே உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கலாம்.
விரும்பியதை அடைந்தவர்கள் எப்படி, எப்படி முயற்சி
செய்தார்கள்? அவர்கள் வெற்றி பெறக் காரணியாய் இருந்தது
எது? எனக்கு அதில் எது பொருத்தமாக இருக்கும்? அமெரிக்காவிலும்
இங்கிலாந்திலும் வெற்றி பெற்ற வழிமுறைகள் இங்கே செல்லுபடியாகுமா?
இப்படியெல்லாம் நீங்கள் கேள்விகளைக் கேட்கத்
தொடங்கிவிட்டால் பதில்கள் உங்களுக்குள்ளேயே
உருவெடுக்கும். இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.
உண்மையை உணர்வீர்கள்.நீங்கள் உணர்வதே உங்களை வெற்றி பெற வைக்கும். அந்த உணர்வைத் தூண்டத்தான் இந்தப் புத்தகம்.
இவர்கள் வென்றது இப்படித்தான்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹70
Tags: ivargal, vendradhu, ippadithaan, இவர்கள், வென்றது, இப்படித்தான், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications