வரைபடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டவளான ஒருத்தி. தனது உடமைகள் என்ற உணர்வும், அவற்றின் ஒழுங்கு குலையக்கூடாது என்ற பிடிவாதமும் கொண்டவள். அவளுடைய தனிமையில் குறுக்கீடாக வந்து சேர்கிற, அவளது இரட்டைச் சகோதரி என இரண்டே மையக் கதாபாத்திரங்களைக் கொண்ட நூல். அவர்களுக்குப் பெயர்கள் இல்லை. அவர்களுடைய பூர்விக நாட்டுக்கோ, போர் காரணமாக இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்திருக்கும் நாட்டுக்கோகூடப் பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை. போரின் விளைவாக எல்லைகள் அழிவதும், தனிநபர்களின் அல்லாட்டமும், குறிப்பிட்ட ஒரு புள்ளியை மட்டுமே திரும்பத் திரும்பச் சுற்றிவரும் பீடிப்பு கொண்ட மனமும், நூல் முழுவதும் கேட்கும் ஒற்றைக் குரலும் என வாசகமனத்தின் சம நிலையைக் குலைக்கக்கூடிய படைப்பு. கதைசொல்லியும் அவளுடைய சகோதரியும் நிம்மதியாகத் தன் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் குடிமகளும், அவளுடைய வாழ்வில் குறுக்கிடும் போரும் என விரிவடையும் குறியீட்டு வாசிப்பையும் தரக்கூடிய நூல். போர்க் காலத்தின் மீது நேரடியான உரத்த விமர்சனத்தை எழுப்பாமல், வாசக மனத்தில் தானாகவே அது எழும் விதமாக அடங்கிய குரலில் பேசும், கலை அனுபவத்தைத் தருவது. புகைமூட்டம் போன்ற காட்சி விவரிப்பின் மூலமாக, பெரும் சுமையாக மாறிவிட்ட அன்றாடத்தைக் கனவுப் புலமாக ஆக்கித் தப்பிக்க முயலும் தனிமனம் அதில் வெற்றியடைய முடிகிறதா என்பதே இந்த நாவலின் ஆதாரக் கேள்வி. The story of twin sisters who escape from an unknown, war-torn country, this novel follows an obsessive-compulsive cartographer trapped in the mapping of her own house and a painter turned code-breaker trying to find the female lover she lost in the war. While the cartographer is obsessed with keeping the world in order, her sister's unexpected visit is equated with a sign of chaos, her sister has a firm grip on the real world and, perhaps, a greater sense of order. Presented within a world of obsession and trauma, this narrative explores whether anyone is immune to the forces of destruction. The novel My Sister Chaos by Lara Fergus, is translated into Tamil by award-winning translator Aniruddhan Vasudevan.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Izhappin varaipadam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹250


Tags: Izhappin varaipadam, 250, காலச்சுவடு, பதிப்பகம்,