திருவல்லிக்கேணியில் ஜாம்பஜார் அங்காடி என்பது சென்னையின் மிகமுக்கியமான மையமாகும். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் மீன் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த இது, இக்காலத்தில் சாதாரணமாக தோற்றமளித்தாலும், இதன் வரலாறு சுமார் நூற்றைம்பது நெடிய வருடங்களாகும். இங்கே இலட்சக்கணக்கான மக்கள் புழுங்கியிருக்கின்றனர், இன்னமும் புழுங்குகின்றனர். அவர்களின் ஆசாபாசங்களை, உணர்வுகளை, கோபதாபங்களை எல்லாம் இந்த சிறுகதை முதல் தொகுப்பில் அடைத்துவிட முயன்று இருக்கின்றேன்!!!இதன் மீன்நாற்றம் படிப்பவர் மனதில் நெடுநாட்கள் வீசும், நாற்றம் என்று நான் சொன்னது, அதன் பழைய தமிழ் பொருளில்!!!
Tags: jam, bazar, kadhaigal, ஜாம்பஜார், கதைகள், பெரு. முருகன், வானவில், புத்தகாலயம்