ஜான் ஆபிரகாம்- ஒரு கலகக்காரனின் திரைக்கதை' என்ற புத்தகம் வம்சி புக்ஸ் வெளியீடாக வந்திருக்கிறது. இதனை தொகுத்துள்ள ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களின் சிரத்தையும், அர்ப்பணிப்புணர்வும்- இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்திலும், அது செம்மையாக தொகுக்கப்பட்ட விதத்திலும் புலப்படுகிறது. ஜான்'னின் திரைப்படங்களைத் தாண்டி அவரது ஆளுமையை நுட்பமான புரிதலோடு கவனப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு திரைக் கலைஞனுக்கான மிகச் சரியான மரியாதையை கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா சூழலை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு ஆச்சர்யமான, முக்கியமான பணி. சினிமாவில் ஆர்வம்கொண்ட இளையசமூகம் இந்த புத்தகத்தை கட்டாயம் வாசிக்க வேண்டும். ஜானை போல் நாம் வாழ இயலாது..ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் -அவரின் 'மாற்று சினிமா' குறித்த கருத்துக்கள், அதற்காக அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான காரியங்கள் நமக்கு உற்சாகத்தையும் துணிச்சலையும் வழங்கும் என்று நம்புகிறேன்.
ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை-John Abraham Kalakaaranin Thiraikathai
- Brand: ஆர்.ஆர். சீனிவாசன்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹250
Tags: john, abraham, kalakaaranin, thiraikathai, ஜான், ஆபிரகாம், கலகக்காரனின், திரைக்கதை-John, Abraham, Kalakaaranin, Thiraikathai, ஆர்.ஆர். சீனிவாசன், வம்சி, பதிப்பகம்