காதல் என்பது கெட்ட வார்த்தை என்றும் அதே நேரம் காதல் இல்லையெனில் சாதல் என்ற பாரதியின் கவிதையும் ஒரு சேரத் தாக்கிய குழப்பமான கிராமத்து குடும்ப சூழ்நிலை எனக்கு. உயிர்ப்போடு இருந்து உயர வளர வேண்டுமென்றால் எந்நேரமும் காதலோடு வாழ்க்கையை அணுகுவதே வழி என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டீர்கள்.
மத ஆவேசங்களையும், ஜாதிக் கூச்சலையும்,மொழி பாகுபாடுகளையும், பொருளாதார யோக்கியதைகளையும் தாண்டியதே கடவுள் விஷயம் என்பதைப் புரிய வைத்திருக்கிறீர்கள்.
சம்பவங்களை விவரித்து விமரிசிக்கும் அழுகு படிப்பு சுவராசியத்தை அதிகரிக்கிறது. இருநூற்று நாற்பது படைப்புகள் எழுதியதும் இந்தப் புத்தகம் எழுதுவதற்கான பயிற்சிதான் என்று சொல்கிறீர்கள். அந்த கனம் இதில் தெரிகிறது.
காதலாகிக் கனிந்து...-Kaadhalaki Kaninthu
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹205
Tags: kaadhalaki, kaninthu, காதலாகிக், கனிந்து...-Kaadhalaki, Kaninthu, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்