நம்முடைய நாட்டை பொறுத்த வரை நான்கு காளான் வகைகள் பெரிதாக வளர்க்கப்படுகின்றன. அவை மொட்டுக் காளான் (Button mushroom), சிப்பிக்காளான் (Oyster mushroom), பால் காளான் (Milky mushroom), மற்றும் வைக்கோல் காளான் (Paddy straw mushroom). அதில் தமிழகத்தில் அதிகமாக வளர்க்கக் கூடியவை என்றால் சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் தான், அதிலும் குறிப்பாக சிப்பிக்காளான் தான் தமிழகமெங்கும் அதிகமாக வளர்க்கிறார்கள். மொட்டுக் காளான் மிகவும் குளிர்ந்த பிரதேசங்களில் தான் வளரக்கூடியவை, தமிழகத்தில் ஊட்டியில் அவைகள் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ 800 பண்ணைகளில் சிப்பிக்காளான் வளர்க்கின்றனர். அந்த சிப்பிக்காளானில் 8 இரகங்களை தமிழக வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது, அதில் ப்ளியுரோடஸ் ஃபொலோரிடா (Pleurotus florida) PF எனப்படும் இரகம் தான் தமிழகமெங்கும் சிறப்பாக வளர்க்கப்பட்டு வருகிறது.
காளான் வளர்க்கலாம் காசு பார்க்கலாம் - Kaalaan Valarkalaam Kaasu Paarkalaam
- Brand: வெ. சுந்தரராஜ்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200
Tags: kaalaan, valarkalaam, kaasu, paarkalaam, காளான், வளர்க்கலாம், காசு, பார்க்கலாம், , -, Kaalaan, Valarkalaam, Kaasu, Paarkalaam, வெ. சுந்தரராஜ், சீதை, பதிப்பகம்