செயற்கரிய செயல்களைச் செய்தவர்களை மனிதகுலம் தங்களுடைய வழிகாட்டிகளாகக் கருதுகிறது. வாழ்வின் முன்னேற்றத்துக்கு, வாழ்க்கையில் வருகின்ற பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு, அவர்கள் சொன்னவையும் செய்தவையும் மற்றவர்களுக்குப் பெரிதும் வழிகாட்டியாக விளங்குகின்றன.தங்களது அறிவுரைகள், செயல்பாடுகள் மூலமாக மக்கள் பின்பற்றத்தக்க, ஒரு வாழும் முன்னோடியாக, உதாரணப் புருஷராக விளங்கிய இவர்கள், தங்களுடைய மரணத்தின் வழியாகவும் ஏன் ஒரு முன்மாதிரியாக விளங்கியிருக்க முடியாது?
இந்த நோக்கத்தின் விளைவாக எழுந்ததுதான் இந்தப் புத்தகம்.
மனித குலத்தை உய்விக்க வந்தவர்கள் என்று போற்றப்படும் ஏசு, நபி, புத்தர், மகாவீரர் முதல் அவதாரங்கள் என்று துதிக்கப்படும் ராமர், கிருஷ்ணர் போன்றோர், அறிஞர்கள் எனப்படும் சாக்ரடீஸ் முதல் பெர்னாட் ஷா, மனத்தால் வாழ்பவர்களான கவிஞர்கள், காந்தி தொடங்கி எண்ணற்ற அரசியல் தலைவர்கள் என்று பலதரப்பட்ட உலகப் பிரபலங்கள் தங்களது மரணத்துக்கு முன்பு கடைசியாக என்ன சொன்னார்கள்? அதன்மூலம் அவர்கள் நமக்குச் சொல்ல வந்தது என்னவாக இருக்கக்கூடும்? இதைப் பற்றி மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியின் விளைவே இந்தப் புத்தகம்.
கடைசிச் சொல்
- Brand: குருஜி வாசுதேவ்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹300
Tags: kadaisi, sol, கடைசிச், சொல், குருஜி வாசுதேவ், Sixthsense, Publications