மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இக் கவிதைக்கு எடுத்துக்காட்டாய் சமூகப்பார்வையோடு ஒவ்வொரு நிகழ்வுகளும், உரையாடல்களும் சிறப்பாக புனையப்பட்டுள்ளன. மனோகரி என்ற டாக்டர் கதாபாத்திரம் பெண்ணினத்திற்கே பெருமைச் சேர்க்கும் விதமாக உள்ளது. 'கடைசி வரை' என்ற புதினத்தின் பெயருக்கேற்ப தான் கொண்ட லட்சியத் திலும் மன உறுதியிலும் கதையின் நாயகி கடைசி வரை தளராது உறுதியாய் இருக்கிறாள் என்பதை சிறப்பான கதை நிகழ்வுகளோடு அருமையாக வடித்துள்ளார். எழுத்தாளர் அருமைச் சகோதரி வாஸந்தி அவர்கள்.
Tags: kadaisi, varai, கடைசி, வரை-Kadaisi, Varai, வாஸந்தி, கவிதா, வெளியீடு