• கடல் கொண்ட நிலம்-Kadal Konda Nilam
புதிய களம். நாம் பார்த்தறியாத மனிதர்கள். தனக்கே தனக்கான பிரத்யேகமான கதை சொல்லும் முறை. இவை-தான் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை மற்ற கதைகளில் இருந்து தனித்துவப்படுத்தி, வாசகரை பிரமிப்பில் ஆழ்த்தும் மந்திரஜாலம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் தெரியும் சம்பவங்களை அடுக்கி ஒரே கதையாக்கும் உத்தி தமிழ் சிறுகதை வரலாற்றில் புதிது. அலுப்புத் தட்டாமல் கதை நகர, சுவாரஸ்யமும் எளிமையும் மிக அவசியம். இவற்றைப் பிரயோகப்படுத்தும்போது படைப்பு, இலக்கிய தரத்தில் இருந்து வெகுஜன ரசனைக்குத் தாழ்ந்துவிடும் அபாயமும் சில சமயங்களில் நிகழ்ந்துவிடும். ஆனால், யுவன் சந்திரசேகரின் எழுத்து எல்லாவற்றையும் தகர்த்துவிடுகிறது. ஒவ்வொரு சிறுகதையையும் படித்து முடித்ததும், இப்படியெல்லாம்கூட எழுதமுடியுமா என்று எழுகிற பிரமிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள், வாசகனை ஒரு புதிய அனுபவத்தை நோக்கி நகர்த்துபவை. திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுபவை. வாழ்வில் நாம் கண்டறியாத ஒரு புதிய உள் வெளிச்சத்தை நமக்கு அறிமுகப்படுத்துபவை. இக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கும், வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு மனிதர்களின் அனுபவங்கள் ஒரு புதிய பயண அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. அனுபவித்தறியாத ஒரு நிறைவைத் தருகின்றன. ஏற்கெனவே கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்த ‘யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்’ தொகுப்பில் இடம் பெற்ற, தனித் தொகுப்பாக இதுவரை வெளிவராத கதைகள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கடல் கொண்ட நிலம்-Kadal Konda Nilam

  • ₹240


Tags: , யுவன் சந்திரசேகர், கடல், கொண்ட, நிலம்-Kadal, Konda, Nilam