கடல் நம்மிடமிருந்து தூரப் போயிருக்கிறது அல்லது நாம்தாம் கடலிலிருந்து தூரமாகப் போயிருக்கிறோம். தூரத்தில் போயிருக்கும் கடல் தம்மை எல்லா நேரமும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாமும் தீராத ஆசையுடன் நம்மிடமிருந்து விலகிப் போன கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடல் தூரத்தில் இருத்தாலும் அதன் நெகிழ்வில் தென்படும் வலிமையும், அதன் வலிமையில் ஒளித்திருக்கும் நெகிழ்வும் நம்மை ஈர்க்கின்றன. அதன் வாசனை என்றோ நம்மைத் தீண்டிவிட்டுப் போன கரத்தின் நினைவாய் நமக்குப் போதை தருகிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் மனிதர்கள் யாவரும் கல் போன்றவர்கள், கடலைப்போலவே நெகிழ்வில் வலிமையும், வலிமையில் நெகிழ்வும் கொண்டவர்கள். அவர்கள் கடல் திரும்ப வரும் என்று காத்திருப்பவர்கள். இது சித்துராஜ் பொன்ராஜின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
கடல் நிச்சயம் திரும்ப வரும்-Kadal Nichiyam Thirumba Varum
- Brand: சித்துராஜ் பொன்ராஜ்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹230
Tags: kadal, nichiyam, thirumba, varum, கடல், நிச்சயம், திரும்ப, வரும்-Kadal, Nichiyam, Thirumba, Varum, சித்துராஜ் பொன்ராஜ், வம்சி, பதிப்பகம்