நம்
சந்திப்பு நிகழும்போது
உரையாடவென
ஒத்திகை பார்த்துப் பார்த்து
சேமித்து வைத்திருந்த வார்த்தைகள்
விரல் வழி வழிந்து
நிலம் புகுந்து மறைகின்றன
ஒவ்வொன்றாய்
காற்றின் துணையோடு
உதவ வந்த
ஒலி பெருகி
காற்றிலேயே கரைய
என் விழிகளில்
கடர்ந்து கொண்டிருக்கின்றன
உனக்கான செய்திகள்.
நிலத்தின்
மையத்திலிருப்பவனைக்
கடல் பார்த்தாயா எனக் கேட்டாள்
கடல்
நிலத்தின் மையத்திலிருக்கிறதா
அல்லது
நிலம்
கடலின் மையத்திலிருக்கிறதா
நிலம்
கடலை உற்பத்தி செய்கிறதா
அல்லது
கடல்
நிலத்தைச் சூழ்ந்திருக்கிறதா
நிலத்தின் கடல்
கடலிலும்
கடலின் நிலம்
நிலத்திலும் கிடக்கிறது
நிலத்தின் பரப்பு
நீரால் குறுக்கப்பட்டிருக்க
நிலத்தின்
வாசல் திறக்கிறது
கடல் புகுகிறது
கடலின்
வாசல் திறக்கிறது
நிலம் நிறைகிறது.
அலை பாடிக் கொண்டிருக்கிறது
கடல் பாடல்களை.
கடலோடு இசைத்தல்-Kadaloadu Isaithal
- Brand: சக்தி ஜோதி
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: kadaloadu, isaithal, கடலோடு, இசைத்தல்-Kadaloadu, Isaithal, சக்தி ஜோதி, வம்சி, பதிப்பகம்