எழுபதில் துவங்கிய உத்வேகம் இது. சிறிய பிரச்சினைகளில் என்னை நானே ரணப்படுத்திக் கொண்டு எழுத்தை இலவம்பஞ்சாய் மாற்றி துடைத்துக் கொள்ளத் துவங்கியபோது இலக்கியம் இலவம்பஞ்சோ கைவானோ இல்லை, அந்தகரணம் என்பதை நல்ல நண்பர்கள் மூலம் அறிந்தேன். அனுபவமும் உணர்த்திற்று. என்னுள் நான் மூழ்கி என் இயல்புகள், நிர்ப்பந்தங்கள் புரிபட தினசரி வாழ்க்கை சிக்கல்கள் குறைந்தன. எனக்குள் நிகழ்ந்ததை உரத்துப் பேசுவது மாதிரி என் கதைகள் அமைந்தன.
Tags: kadarpalam, கடற்பாலம்-Kadarpalam, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்