• கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா?
குடும்பச் சூழல் காரணமாக, எதிர்பாராத நேரத்தில் பொறுப்புகளை தோளில் சுமக்க நேரிட்டவர் நூலாசிரியர் துவாரக்நாத் ரெட்டி. தொழிலதிபராக உயர்ந்து சாதனைகள் பல செய்தவர். இப்போது ஓய்வு பெற்று, திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் அமைதி வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். ‘Can god improve my balance sheet?’ என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் ஆங்கில நூலின் உள்ளடக்கம், ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பும் தன்மை கொண்டது. வாழ்க்கையில் வெற்றி பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்த ஆங்கில நூலை எளிமையான, அழகான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கி.கார்த்திகேயன். வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களைப் பற்றி விவரிக்கிறது இந்த நூல். இயற்கையின் விதிமுறைகளின்படி நமது வாழ்க்கையில் அரங்கேறும் பல்வேறு சம்பவங்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் அலசுகிறது. அதோடு, அதிர்ஷ்டம் என்ற சொல்லின் நம்பகத்தன்மை பற்றியும் விவாதிக்கிறது. ‘நீ அறியாத உண்மைகளின் ஆதாரங்களைத் தேடி அலைவதைவிட, உனக்குத் தெரிந்தது என்று நீ உணரும் உண்மைகளின் ஆதாரங்களைப் புரட்டிப் பார்த்து விஷயங்களை அறிந்துகொள்!’ இப்படி ஆழமான கருத்துகளை அறிந்தும், அவற்றின்படி வாழ்ந்தும் அனுபவங்களின் துணைகொண்டு துவாரக்நாத் எழுதியிருக்கும் இந்த நூல் அனைவருக்குமான கையடக்க வழிகாட்டி!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா?

  • ₹65
  • ₹55


Tags: kadavul, ungalukku, manager, aaga, venduma, கடவுள், உங்களுக்கு, மேனேஜர், ஆக, வேண்டுமா?, துவாரக்நாத் ரெட்டி, விகடன், பிரசுரம்