“நீ என்னை எவ்ளோ லவ் பண்ற?” என்றான் கெளதம் பூஜாவிடம்.
“இந்த உலகத்துல இருக்கிற எல்லாப் பொண்ணுங்களும், தன்னோட லவ்வர் மேல
எவ்வளவு காதல் வச்சிருப்பாங்க... அந்த எல்லா காதலையும் ஒண்ணா சேத்தா
ஒரு பெரிய காதல் வரும்ல்ல?” என்றபோது பூஜா தனது இரண்டு கைகளையும்
அழகாக அகல விரித்து, “அவ்ளோ காதல் வச்சிருக்கேன்” என்றாள்.
குளித்து விட்டுக் கரையேறிய நந்தினியின் நெற்றியில் அவள் முன்தலை முடி
அழகாக கலைந்திருந்தது. அவள் அருகில் நெருங்கி நெற்றி முடியைச் சரி செய்த
கெளதம், “கவிஞர் அறிவுமதியோட கவிதை ஒண்ணு இருக்கு.” என்றபடி அவள்
தோளில் கை வைத்தான். “என்ன கவிதை?” என்ற நந்தினியிடம் கெளதம்,
நெற்றிழுழயைச் சரிசெய்வதாகத்தான் தொடங்குகிறது பெரும்பாலும் அது
என்று கூறி முடிக்க... நந்தினி கிறக்கத்துடன், “எது?” என்றபோது கெளதம் மேலும்
அவளருகில் நெருங்கியிருந்தான். சில வினாடிகள் தடூமாறிய நந்தினி சட்டென்று
கிறக்கத்திலிருந்து விடுபட்டு... சற்று பின்னால் தள்ளி நின்றுகொண்டு, “இப்ப
எனக்கு ஒரு கவிதை தோணுது.” என்றாள்.
“என்ன கவிதை?” என்ற கெளதமிடம் நந்தினி மெல்லிய சிரிப்புடன்,
நெஞ்சில் கைவைத்து
தள்ளுவதாகத்தாள் முடிகிறது
பெரும்பாலும் அது
என்றவள் கெளதமின் நெஞ்சில் கையை வைத்து அற்று நீரில் தள்ளிவிட்டாள்.
Tags: kadhal, 2, காதல், 2, ஜி.ஆர்.சுரேந்தர்நாத், வானவில், புத்தகாலயம்