ஆன்மீக உலகில்மிகவும் பரவசத்துடன் பேசப்படும் பிரபலதமிழ் எழுத்தாளர் யார் என்றால் பாலகுமாரன் ஒருவர் மட்டும்தான். இலக்கியத்தில் கருத்துச் செறிவுமிக்க படைப்புகளை பக்தித் தேன் கலந்து வாசகர்களுக்கு விருந்தாக்கி வருகிறார் எழுத்துச்சித்தர். லட்சியம் லட்சியம் என்று லட்சங்களைப் பதுக்கிற பெருச்சாளிகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலக்கிய வேஷம் போட்டு அட்டகாசமாக ஆடம்பர வாழ்க்கையில் கொழுந்து உலவுகின்றனர் பலர். திமிர்பிடுத்துத்திரிகின்றனர். திரைப் படத்துறையில் சின்னத் திரையில் பணமே பிரதானம் என்று எழுத்தை விலைபேசி இற்க இவர்கள் மனம் ஒருநாளும் கூசியதில்லை. இதற்கு நேர் எதிர்த்திசையில் பாலாவின் இலக்கிய லட்சியப் பயணம் அமைந்துள்ளது.
ஆர்.ஆர் சாமி, திருவண்ணாமலை.
Tags: kadigai, கடிகை-Kadigai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்