கலாபன் எனும் மனிதனின் பதினோராண்டுக் கால வாழ்வு இந்நாவல். குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் கடலின் ஏக்கத்திலும் கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயணம், கடலோடிகளுக்கு வரம் அருளும் முகவர்கள், கொண்டாட்டமும் ஏக்கமும் நிறைந்த கடல் வாழ்வு, மரணபயத்தை தரும் 'கடல் நோய்மைகள்', தீராததும் கட்டறுந்ததுமான காமம், உறவுகளின் முகம் தேடும் காத்திருப்பு, நாளையின் எதிர்பார்ப்புகள், நிலங்களும் காலநிலைகளும் அறிமுகப்படுத்தும் பல்வேறு மனிதர்கள் என கலாபனின் வாழ்வுபற்றி உள்ளார்ந்த மடிப்புகளுடன் விரிவுகொள்கிறது நாவல்.கடல் அள்ளியும் கொடுக்கிறது; பரிதவிக்கவும் விடுகிறது. மனித வாழ்வைப் பரிகசிக்கிறது. பெரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் உருவாக்குகிறது. நெருக்கமானவர்களிடமிருந்து பிரித்து வைக்கிறது; பின் அதுவே இரக்கங்கொண்டு சேர்த்தும் வைக்கிறது. மீண்டும் சன்னதம் கொண்டு தாயங்களை உருட்டி விளையாடிப் பகடி செய்கிறது. கப்பல், மனிதர்கள், கடல் பிரதேசங்கள், காலநிலைகள் தரும் குளிர்ச்சி, வறண்ட காற்று, மாறும் நிலம், போக்குவரத்தின் நுட்பங்கள் போன்றனவற்றோடு புனைவின் உத்திகளும் நிறைந்த சீரான மொழியைக் கைப்பற்றியிருக்கிறார் தேவகாந்தன். நாவலின் சில அத்தியாயங்கள் சிறுகதைகளாக வாசிக்கப்படக்கூடிய செறிவையும் கொண்டிருக்கின்றன.A new novel from writer Devakanthan well-known for his books Kanavuchirai and Kanthil paavai. The novel portrays the life of a man named Kalaaban through eleven years. With chapters perfect enough to be read as individual short stories, the novel talks about migratory life on different sides of the sea, as well as over the sea. The seas play an important role in the novel separating and uniting people. Devakanthan’s mesmerising language coupled with details about ships, seasons and landscape gives us an enchanting reading experience.
Kalabhan Kathai
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹240
Tags: Kalabhan Kathai, 240, காலச்சுவடு, பதிப்பகம்,