குறிப்பாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த கல்யாணம் ஒன்றில் கலைஞரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில்கூட என்னைப் பார்த்து கைகொடுத்து நலம் விசாரித்தவர், `நீங்கள் ஜூனியர் விகடனில் எழுதி வரும், `எப்போதோ கேட்ட குரல்’ தொடரைப் படித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார். அதேபோல், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோபாலபுரம் வீட்டில் அவரை, கவிஞர் வைரமுத்துவுடன் அமர்ந்திருக்கும்போது சந்தித்தேன். அப்போது அவர் வைரமுத்துவிடம், `இவர், என்னோட நீண்டகால நண்பர். இப்ப ஆன்மீகம் பக்கம் போயிட்டார்’ என்று அறிமுகப்படுத்திவைத்தார். அவருடைய நினைவையும், அவர் என்மீது கொண்டிருந்த நட்பையும் கண்டு நான் ஆச்சர்யமடைந்தேன். ஒருவர், உயர்ந்த இடத்துக்குப் போகும்போது உடன்பிறந்தவனையே மறந்துபோகும் இந்தக் காலத்தில் ஒரு நண்பனின் செயலைகூடத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்றால், அது கலைஞரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. அதனால்தான் அவர் இன்றும் பலருக்கும் கலைஞராகவே ஜொலிக்கிறார்
கலைஞர் சொன்ன சுவையான கதைகள் - Kalainger Sona Suvaiyana Kadhaigal
- Brand: டாக்டர் வன்மீக வெங்கடாசலம்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: kalainger, sona, suvaiyana, kadhaigal, கலைஞர், சொன்ன, சுவையான, கதைகள், , -, Kalainger, Sona, Suvaiyana, Kadhaigal, டாக்டர் வன்மீக வெங்கடாசலம், சீதை, பதிப்பகம்