தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.
சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ஆகிவிட்டதை! சாலைகளின் உளவியலைப் பதிவு செய்த உலகின் முதல் கவிஞனாக கவிமுகில்தான் இருக்கக்கூடும். “மொத ஆட்டம்” என்றொரு கவிதை, டூரிங் கொட்டகைகளுக்கு மாலை 7 மணி காட்சிக்குச் செல்வதை அருமையான கவிதையாகப் புனைந்திருக்கிறார் கவிஞர் கவிமுகில்.
“கல்பொரு சிறுநுரை” உங்களின் நெஞ்ச மேடுகளில் தொடர்ந்து முட்டி மோதும்! அவை உருவாக்குகிற நுரைகள் படர்ந்து பெருகி, உங்களை வான் மேகங்களுக்கிடையே கடத்திச் செல்லும் ஆற்றலுடையவை!
கல்பொரு சிறுநுரை - Kalporu Sirunurai
- Brand: கவிமுகில்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹180
Tags: kalporu, sirunurai, கல்பொரு, சிறுநுரை, -, Kalporu, Sirunurai, கவிமுகில், டிஸ்கவரி, புக், பேலஸ்