• கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள்  - Kamban Padaitha Kavinmigu Pathirangal
கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர்.[1] கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது. அம்பிகாபதி கவிஞனாக இருந்து, சோழ மன்னனின் மகளான அமராவதி என்பவளைக் காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக சோழ மன்னன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டார் என்றும், அதன் காரணமாகவே இராமாயணத்தில் புத்திர சோகத்தினைக் கொண்ட தரசதன் பாடும் பாடல்களில் புத்திர சோகம் அதிகம் வெளிபடுவதாகவும் கூறுகின்றனர். சோழ மன்னனுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் கம்பர், சோழநாட்டிலிருந்து ஆந்திர நாட்டிற்குச் சென்று தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. கம்பரை சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்துள்ளார். இவர் திரிகார்த்த சிற்றரசனாவார். இவரே கம்பரை இளமைக் காலத்தில் பேணிக்காத்தவர் என்றும்[2], பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர். சோழ மன்னன் கம்பநாடு என்ற பகுதியைக் கம்பருக்கு தந்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் சோழன் தந்தது என்று கூறுகின்றனர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள் - Kamban Padaitha Kavinmigu Pathirangal

  • ₹50


Tags: kamban, padaitha, kavinmigu, pathirangal, கம்பன், படைத்த, கவின்மிகு, பாத்திரங்கள், , -, Kamban, Padaitha, Kavinmigu, Pathirangal, முனைவர் க. முருகேசன், சீதை, பதிப்பகம்