வேம்பாகக் கசக்கும் கணிதப் பாடத்தில் உள்ள ஆர்வத்தையும், விருப்பத்தையும் தூண்டுவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
படிக்கும் காலத்தில் கணிதத்தில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டுமின்றி, வருங்காலத்தில் எழுதவுள்ள போட்டித் தேர்வுகளில் கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு எளிதில் விடை கண்டுபிடிக்கவும் உதவும் சில எளிய வழிமுறைகளை இந்தப் புத்தகம் கற்றுக் கொடுக்கும்.
எண்களை அடிப்படையாகக் கொண்ட சுடோகு இன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோரைக் கட்டிப் போட்டிருக்கிறது. அறிவுத்திறன் போட்டியாகக் கருதப்படும் சுடோகு விளையாட்டை, அல்ஜைமர் என்ற நோயால் பாதிக்கப்பட்டோருக்கு டாக்டர்களே பரிந்துரைக்கும் அளவுக்கு மூளைக்கு நல்ல பயிற்சியைக் கொடுக்கக் கூடிய சுடோகு பற்றி ஓர் விரிவான அலசல்.
கணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்! முதல் பாகம்-Kanakkil Unga Kulanthaiyum Methaiyaagalaam Muthal Paagam