ஆண்கள் வர்க்கத்தையே வெறுக்கும் ஒரு நடிகைக்கு லட்சோபலட்சம் ஆண் விசிறிகள், ஆயிரக்கணக்கில் நலன்விரும்பிகள், சொடுக்கும் தூரத்தில் காரியதரிசிகள், ஆனால் ஆத்ம நண்பர்கள்? இந்த முரண் முதன்முதலில் துளிர்விடுவது வேண்டுமானால் அபிநயா பிரபலமான பின்பாக இருக்கலாம். அதன் வேர் எங்குவரை செல்கிறது என்று பார்த்தீர்களேயானால் அம்முவின் சாயலை அபிநயாவில் நீங்கள் பார்ப்பீர்கள். அரசியல் நீங்கலாக!
ஆண்கள் பெரும்பான்மையாக இயங்கும் ஒரு துரையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவதற்கு குந்தவையில் கம்பீரமும், பூங்குழலியின் வசீகரமும் மட்டும் இருந்தால் போதாது, பல நேரங்களில் நந்தினியின் ராஜதந்திரத்தையும் அது கோருகிறது.
’க்வீன்’, ’தலைவி’, ’ஐயர்ன் லேடி’ இந்த மூன்று படங்களும் திரைக்கு வரும் முன்பே பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘கனவு நாயகி’ சுடச்சுட தினத்தந்தியில் தொடராக வெளிவந்து காத்திரமாக வாசகர் பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது.
கனவு நாயகி
- Brand: பட்டுக்கோட்டை பிரபாகர்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹140
Tags: kanavu, nayagi, கனவு, நாயகி, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில், புத்தகாலயம்