ஆண்-பெண் உறவு என்று ஆரம்பித்தாலே, பிரச்னைகளும் ஒட்டிக்கொண்டுதான் வரும். அதுவும், குடும்பங்களில் கணவன்-மனைவிக்குள் மனவேறுபாடுகள் எழும்போது அந்தப் பிரச்னைகள் நீதிமன்றம் வரை விஸ்வரூபம் எடுக்கும்! குடும்பப் பிரச்னைகளின் தொடர்ச்சியாக, முறையற்ற காதல், கட்டாயத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து, ஜீவனாம்ச மறுப்பு... என நீண்டு வளர்ந்துசெல்லும் குற்ற நடவடிக்கைகள், கடைசியாக நீதிமன்றத்தின் படிகளில் ஏறி அனைவரையும் அலைக்கழிக்கின்றன. பலர், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போலீஸ், கோர்ட் என்று காலத்தைக் கடத்தி பொருளாதாரத்தையும் இழந்து, மானத்தையும் இழந்து நிற்பார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என ஏங்கித் தவிப்பார்கள். கடைசியாக, ‘எதற்காக நமக்கு இந்தப் பிரச்னைகள்’ என்று வாழ்க்கையின் யதார்த்தம் சுட ஆரம்பிக்கும்போது நெஞ்சு கனக்கும்! குற்ற நடவடிக்கைகளில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான். பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகள் எப்போதும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நீதிமன்ற நடவடிக்கைகளில், பால்ய திருமணம், விவாகரத்து, வரதட்சணை, ஜீவனாம்சம் என, தான் கண்ட பல குடும்ப வழக்குகளை கதைகளாக விவரித்து, ஆண்-பெண் பேதம் பார்க்காமல் நடுநிலையாக எழுதி இருக்கிறார் வழக்கறிஞர் சுமதி. குடும்பங்களில் பிரச்னைகள் வராமல் தடுப்பது எப்படி என்பதற்கும், வந்த பிரச்னைகளுக்குச் சட்டத்தின் துணைகொள்வது எப்படி என்பதற்கும் இந்த உண்மைக் கதைகள் நிச்சயம் வழிகாட்டும். இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கும், தீர்வு பெறுவதற்கும் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இந்தச் சட்டங்கள் துணைக்கு வரும்!
கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி
- Brand: வழக்கறிஞர் சுமதி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹65
-
₹55
Tags: kandathai, solgiraen, pengalai, pathukakkum, satta, vazhkaati, கண்டதைச், சொல்கிறேன், பெண்களைப், பாதுகாக்கும், சட்ட, வழிகாட்டி, வழக்கறிஞர் சுமதி, விகடன், பிரசுரம்