கண்ணதாசன் ஜூன் 24- 1927 ஆம் ஆண்டு , சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடற்பட்டியில் பிறந்தார். பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், தாய் விசாலாட்சி இந்த தம்பதியினருக்கு எட்டாவது மகனாக பிறந்தார் நம் கவிஞர். கவிஞருக்கு பெற்றோர் வைத்த இயற்பெயர் முத்தையா. ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார் ஒரு பத்திரிக்கை அதிபர். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார்.
கவிஞர் கண்ணதாசன் கதம்பம் - Kannadhasan Kadhambam
- Brand: இராம. கண்ணப்பன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹75
-
₹64
Tags: kannadhasan, kadhambam, கவிஞர், கண்ணதாசன், கதம்பம், -, Kannadhasan, Kadhambam, இராம. கண்ணப்பன், கண்ணதாசன், பதிப்பகம்