நவீனமயமாக்கலால் உறவுகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களையும் அடையாள
நெருக்கடிகள் உருவாக்கும் இருப்பு சார்ந்த சிக்கல்களையும் இத்தொகுப்பிலுள்ள
கதைகள் விரிவாகப் பேசுகின்றன. கிழக்கும் மேற்கும் முன்னெடுக்கும்
எதிரெதிர் நம்பிக்கைகளையும் அவற்றினிடையே ஊடாடும் மனிதர்களையும் களமாகக்
கொண்ட பதினான்கு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கைகள் வேறாயினும்
வாழ்வின் அபத்தங்களை ஏற்று வாழ நிர்ப்பந்திக்கப்படும் சூழல் யாவருக்கும்
பொதுவானதாக இருப்பதே இக்கதைகளை இணைக்கும் சரடு. இயற்கையை நீங்கி வாழ
வற்புறுத்தும் நவீன வாழ்வின் அடிப்படையை தொடர்ச்சியாகக் கேள்விக்கு
உட்படுத்தும் கதைகள். இவை வெளிப்படையான அரசியல் கதைகளல்ல, மாறாக, இந்தக்
கதைகள் பேசும் அரசியலை நாம் ஒருபோதும் புறந்தள்ளவியலாது.
கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன
- Brand: ஶ்ரீதர் ரங்கராஜ்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹220
Tags: karadigal, neruppai, kandupidithuvitana, கரடிகள், நெருப்பைக், கண்டுபிடித்துவிட்டன, ஶ்ரீதர் ரங்கராஜ், எதிர், வெளியீடு,