• கருணாநிதி என்ன கடவுளா?-Karunanithi enna kadavula?
நான் பெற்ற விருது!‘ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டுக் கோவையிலே என்ன கொண்டாட்டம்? மொழி என்பது வெறும் ஒலியா? இனத்தின் முகமல்லவா! இனத்தை அழித்துவிட்டு மொழிக்கென்ன கொண்டாட்டம்? செம்மொழி மாநாட்டுக்குத் தமிழ்த்தாய் வர மாட்டாள்!’இடையறாது எழுதிக்கொண்டிருந்தேன்.அதிகாரத்தில் வேறு இருக்கிறாரே கருணாநிதி!செம்மொழி மாநாட்டின் இறுதி நாளன்று (27.6.10) பிற்பகல் ஆறேழு குண்டர்கள் ‘மணக்க மணக்க செம்மொழியில்’ இரைந்து கொண்டே என் வீடு புகுந்து, என் கழுத்தினை இறுக்கி என்னைத் தாக்கிவிட்டு, வீட்டுப் பொருள்களைச் சேதப்படுத்தி, மகிழ்வுந்தையும் அடித்து நொறுக்கி விட்டுச் சென்று விட்டார்கள்!என் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து விட்டனர்!காவல் துறைக்கு அடித்தவர்களைத் தெரியும்; அடிக்கச் சொன்னவரையும் தெரியும் என்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை! என்னுடைய எழுத்தின் வலிமையை அதுவரை நான் அறிந்திருக்கவில்லை! அதனுடைய ஆற்றலைக் கருணாநிதிதான் எனக்கு உணர்த்தினார்! ஒரு முதலமைச்சரால் ‘மரியாதை’ செய்யப்படுவதைவிட எழுதுபவனுக்கு வேறென்ன பெருமை வேண்டும்?என் எழுத்துக்கு நான் பெற்ற சிறந்த விருது இதுதான்!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கருணாநிதி என்ன கடவுளா?-Karunanithi enna kadavula?

  • ₹250


Tags: , பழ. கருப்பையா, கருணாநிதி, என்ன, கடவுளா?-Karunanithi, enna, kadavula?