எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு?ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு கறுப்புப் பணம் மிகப் பெரிய பிரச்னையா?கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கவேண்டும் என்று ஒவ்வொரு-முறையும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் அவர்களே ஆளுங்கட்சியாக மாறும்போது எதுவும் செய்வ-தில்லை. ஏன் இந்த முரண்?சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்து வருகின்றன. அரசாங்கம் தலையிட்டு இதனை மீட்டெடுக்க முடியாதா? நீதிமன்றத்தால் எதுவும் செய்யமுடியாதா?சில பெரிய வங்கிகள் ஹவாலா முறையில் பணம் ஈட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை என்னாயிற்று? இதுவரை யாராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? தண்டிக்கப்-பட்டிருக்கிறார்களா?வெளிநாடுகளில் இந்தப் பிரச்னை இல்லையா? அங்கெல்லாம் எப்படி கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்?கறுப்புப் பணம் என்பது தீராத ஒரு வியாதி. நம் தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தை அது சிறிது சிறிதாக அரித்துத் தின்றுக்கொண்டிருக்கிறது. இந்த நோய்க் கிருமியின் தோற்றம், பரவல், பலம், அபாயப் பண்புகள் என்று அனைத்தையும் இந்தப் புத்தகம் படிப் படியாக அறிமுகப்படுத்துகிறது. தேசிய வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவத்தின் துணைகொண்டு இதனை ரமணன் எழுதியிருக்கிறார்.
கறுப்புப் பணம்-Karuppu Panam
- Brand: ரமணன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: , ரமணன், கறுப்புப், பணம்-Karuppu, Panam