கருவேலங்காட்டுக் குருவிகளைப் போல ஊரும் உறவும் போற்ற ஒற்றுமையாய் வாழ்ந்த குடும்பம் ஒரு குடியால் சீரழிவதுதான் கருவேலங்காட்டுக் கதையின் மையக்கரு. நாவலின் பலம் அது தன் வட்டார வழக்கிலேயே பேசப்படுவதுதான். தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான தேவாரத்தில் கதை நிகழ்கிறது. கருவாயன் ரங்கம்மாள்தான் கதை நாயக நாயகி. தமிழகத்து கிராமங்கள்தோறும் இன்றும் நம் கண்முன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ மனிதர்களைத்தான் நாவல் முழுதும் நடமாடவிட்டிருக்கிறார் ஆசிரியர். கிராமப் பஞ்சாயத்தாகட்டும், கோயில் திருவிழாவாகட்டும் எல்லாமே பச்சக்கென்று நம் மனதிற்குள் வந்து உட்கார்ந்து பிசைகிறது. அண்ணன் குடும்பத்திற்காக தன் வாழ்வை தியாகம் செய்யும் செல்லம் போன்ற பாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாத படைப்பு, குடியால் அன்பு சாம்ராஜ்யம் அடியோடு அழிந்து போவதை உணர்த்தும் நாவல். இரா. மணிகண்டன். நன்றி – குமுதம் 6, மார்ச் 2013.
கருவேலங்காட்டுக் கதை-Karuvelangattu Kadhai
- Brand: ராஜா செல்லமுத்து
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹100
Tags: karuvelangattu, kadhai, கருவேலங்காட்டுக், கதை-Karuvelangattu, Kadhai, ராஜா செல்லமுத்து, கவிதா, வெளியீடு