மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர் போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு நூறு முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவொரு அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச்சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்களென (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரசியமாக அமைக்கப்பட்ட இந்நாவலை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம்.
கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி
- Brand: மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹500
Tags: kasaargalin, agarathi, pengal, prathi, கசார்களின், அகராதி, -, பெண்கள், பிரதி, மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ், எதிர், வெளியீடு,