கஷ்மீரின் வரலாறு மற்றும் அரசியல் குறித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய, இன்றியமையாத நூல் இது.”கஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்தநூல் கஷ்மீரிகளை, கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள, கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது.
இந்த நூல் கஷ்மீரி தேசியத்தின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வரலாற்றின் தடயங்களை பனிப்போர் காலங்களில் அரசியலில் ஈடுபாடுகொண்ட கம்யூனிச தொழிற்சங்கத் தலைவரான கஷ்மீரி பண்டிதர் சம்பத் பிரகாஷ் மற்றும் கஷ்மீரி முஸ்லீம் அஃப்ஸல் குரு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மூலமாகக் கண்டறிகிறது. பனிப்போர் முடிந்து, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து, பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலகட்டத்தில் அஃப்ஸல் குரு கஷ்மீர் கிளர்ச்சியின் துவக்கத்தில் அரசியல்ரீதியாக ஈடுபாடுகொண்டவர். இந்தவகையில் இன்னும் பலரது கதைகளும் இதில் பின்னிப்பிணைந்துள்ளன.
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
- Brand: செ. நடேசன்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹380
Tags: kashmir, desiyathin, palveru, mugangal, கஷ்மீரி, தேசியத்தின், பல்வேறு, முகங்கள், செ. நடேசன், எதிர், வெளியீடு,