புத்தகத் திருவிழாவின்போது தில்லி வந்திருந்த சக்தி ஜோதி நான்கு நூல்களைப் பரிசளித்தார். இப்போதெல்லாம் வாசிப்புக்கு பயணங்கள்தான் வாய்ப்பாக அமைகின்றன. வானொலிக்குச் செல்லும் வழியில் படிப்பதற்காக சட்டெனக் கையில் கையில் கிடைத்த ஒன்றை எடுத்துச்சென்றேன். சுகுமாரனின் முன்னுரையைப் படிக்கும்போதுதான் இது அவரது நான்காவது நூல் என்று தெரிந்தது. அடடா... முன்னரே பார்த்து எடுத்திருந்தால் அவருடைய கவிதையின் வளர்ச்சியை அவதானித்திருக்கலாமே என்ற எண்ணம் ஒருபக்கம். படித்தபின் நல்ல கவிதை நூல் படிக்கத் தேர்வு செய்தேன் என்ற திருப்தி மறுபக்கம். இது விமர்சனம் அல்ல. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே. சக்திஜோதி அவருடைய ஐந்து கவிதை நூல்களையும் பஞ்சபூதங்களை தலைப்பாகக் கொண்டு படைத்திருப்பதாகச் சொன்னார். இது காற்று குறித்தானது. காற்று மட்டுமில்லை, நிலமும் நீரும் வானும் தீயும்கூட இங்கே இருக்கத்தான் செய்கின்றன.எந்தவொரு கவிதைத் தொகுப்பிலும் எல்லாக் கவிதைகளுமே மனதிற்குப் பிடித்து விடுவதில்லை. சில கவிதை நூல்களில் மிகச்சில கவிதைகளே திருப்தி தரும். சிலவற்றில் பலவும் திருப்தி தரும். இது இரண்டாவது வகை.
காற்றில் மிதக்கும் நீலம்-Katril Mithakkum Neelam
- Brand: சக்தி ஜோதி
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: katril, mithakkum, neelam, காற்றில், மிதக்கும், நீலம்-Katril, Mithakkum, Neelam, சக்தி ஜோதி, வம்சி, பதிப்பகம்