• கோடிட்ட இடங்களை நிரப்புதல்-Koditta Idangalai Niraputhal
இங்கே கவிஞர் சுமதிராம், கோடிட்ட இடங்களாக நிறையவற்றை நமக்குக் காட்டி அவற்றை நம்மைக் கொண்டே நிரப்பிக் கொள்ளச் சொல்கிறார். அவருக்கான அனுபவங்களைக் கொண்டு அவரும் நிரப்பிக்கொண்டே வருவதைப் படித்துப் படித்து... நகர்ந்து வருகிற வாசக நெஞ்சங்களுக்கு அவரவர் அனுபவங்களுக்கேற்ப நிரப்பிக் கொள்கிற புதிய பாடங்களையும் கற்றுக் கொடுத்து விடுகிறார். இளம்பிஞ்சுக் கையைப் பிடித்து மெல்ல மெல்ல நடக்கக் கற்றுக் கொடுக்கும் தாயின் அன்புப் பிடிப்பைப் பார்த்திருக்கிறோம்! தோழமையோடு கை குலுக்கி, இணைந்து ஒன்றாகி ஒரு பாதையில் நடக்கும் நட்புப் பிடிப்பைக் கண்டிருக்கிறோம்! தளர்ந்துபோன பெற்றோர் களை, உற்றார் உறவினர்களை அணுகி அணைத்துக் கொள்ளும் பாசப் பிடிப்பையும் அனுபவித்திருக்கிறோம்! தட்டுத் தடுமாறிக் கீழே விழப்போகும் ஆதரவற்றவர் களையும் வழிகொண்டு சேர்க்கும் நேசப்பிடிப்பையும் உணர்ந்திருக்கிறோம். இவையனைத்தையும் ஒரே துடிப்போடு தனது கவிதைகளின் வழியே நமக்குள் மறுபதிவு செய்கிறார் இந்தக் கவிஞர் சுமதிராம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கோடிட்ட இடங்களை நிரப்புதல்-Koditta Idangalai Niraputhal

  • ₹50


Tags: koditta, idangalai, niraputhal, கோடிட்ட, இடங்களை, நிரப்புதல்-Koditta, Idangalai, Niraputhal, சுமதி ராம், வம்சி, பதிப்பகம்