குடிமைச் சமூகத்தின் வளர்ச்சிக்கென்னும் பெயரளவில் முன்வைக்கப்பட்டாலும் அணுசக்தி மனிதகுல அழிவுக்கே வழிவகுக்கும் என்பதை உணர்ந்த சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் இயங்கிவரும் அறிவுஜீவியினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் காலச்சுவடில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
அணுசக்தி குறித்து மேம்போக்கான புரிதலைக் கொண்டிருக்கும் பொதுச்சமூகத்தின் புரிந்துணர்வைச் செழுமைப்படுத்தும் நோக்கத்தில் அணுசக்தியால் உருவாகும் சுற்றுச்சூழல் மாசுகளையும் விபரீதங்களையும் உணர்ச்சிவசப்படலின்றி, கூர்ந்த அவதானிப்புடனும் தெளிந்த அறிவுடனும் எடுத்துரைக்கின்றன இக்கட்டுரைகள்.
அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து நடத்தப்படும் மக்கள் போராட்டம், அணு உலை செயல்பாட்டு முறைகளில் காணப்படும் குறைகளைக் களைய மேற்கொள்ளப்பட்டிருக்கும் நீதிமன்றப் போராட்டம் என கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும் வாசகனின் முன்வைத்து அவனது சிந்தனையைக் கிளறிவிடும் கட்டுரைகள் இவை.
koodankum anu sakthiyum anu aauthangalum
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: koodankum anu sakthiyum anu aauthangalum, 150, காலச்சுவடு, பதிப்பகம்,