அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25
(ஆற்றின்)அறல் போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும்,
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை – பரி 3/31,32
கூந்தல்மா என்ற குதிரை வடிவத்தோடு வந்த கேசி என்பவனின்
எரிகின்ற சினத்தைக் கொன்றவனே! உன் புகழைப் போன்றன உன் கைகள்;
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை – கலி 103/53
தன்னை விரும்பாத கஞ்சன் முதலானோர் கட்டவிழ்த்துவிட்ட கழுத்து மயிரினைக் கொண்ட குதிரையை
Tags: koonthal, கூந்தல்-Koonthal, ஜெயமோகன், கவிதா, வெளியீடு