ஹான்ஷான் என்றால் குளிர்ந்த மலை எனப் பொருள்படும். சீனாவின் தாங் பேரரசைச்
சேர்ந்த ஹான்ஷான் எனும் ஜென் துறவி, தாவோயிய மற்றும் சான் மரபையொட்டி
எழுதிய கவிதைகளில் இருந்து நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
“குளிர்மலை என்பது ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பதற்குப் பதிலாக மனநிலையைக்
குறிக்கும் பெயராகவே தோன்றுகிறது. இப்புரிதலோடு, புத்தரை நமக்கு வெளியே
தேடியலைவதை விடவும், நம் மனமெனும் இல்லத்தில் வீற்றிருக்கும்
‘மறைந்திருக்கும் பொக்கிஷமான’ அவரை அடைய வேண்டுமென்ற மறைஞானமே
இக்கவிதைகளின் அடிநாதமாக உள்ளது.
Tags: kulirmalai, குளிர்மலை, சசிகலா பாபு, ஹான்ஷான், எதிர், வெளியீடு,