அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. மௌனத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்மமான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின் தீவிரம் உக்கிரமானது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்கு பாம்புகளைத் தவழவிடுகின்றன. வரவேற்பறைகளில் மிருகங்களை நடமாடவிடுகின்றன. கொடுங்கனவுகளாக சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. தேவிபாரதி
Kuliyalaraiku Veliye Satham Kettukondirukirathu
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹160
Tags: Kuliyalaraiku Veliye Satham Kettukondirukirathu, 160, காலச்சுவடு, பதிப்பகம்,