குன்னூத்தி நாயம்' கதையிலும் ஒரு காட்சி இருக்கும். போரிங் பைப்பு உடைந்து போனதால் காலனி சனங்க குடிக்கத் தண்ணீரில்லாமல் காடு கிணறு என்று அலைந்து சோர்ந்து போக, மேட்டூர் தண்ணீர் தொட்டியில் ஊர்ப்பக்கம் போய்க் கொண்டிருக்கும் வால்வை கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு, சக்கிலித் தெருப்பக்கம் தண்ணீர் வரும் வால்வை திறந்ததற்காய் தண்ணீர் டேங்கிலேயே மணிப் பையனை கட்டிவச்சு அடித்த கவுண்டரின் சாதித்திமிரும், அதை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்படும் வசவுச் சொற்களும் மிகவும் அப்பட்டமாக அந்தக் கதையில் இருக்கும். இத்தகைய வாழ்வோட்டம் தன் அனைத்துக் கதைகளிலும் இருக்கும்படி எழுதுவது ஹரியின் தலித் எழுத்து வகைமை.
Tags: kunnuthi, nayam, குன்னூத்தி, நாயம், ஹரிகிருஷ்ணன், எதிர், வெளியீடு,