• குட்டு
“ஒரு ஆசிரியருக்கு தான்‌ ஆசிரியராக இருப்பது மரியாதைக்குரிய ஒன்றாகத்‌ தோன்றாமல்‌, ஒரு நாட்டிற்குத்‌ தான்‌ அதிபராக வேண்டும்‌ என்று தோன்றுகிறது. இது ஆசிரியர்களுடைய தினம்‌: அல்ல. என்றைக்கு, நாட்டின்‌ அதிபர்‌ அந்தப்‌ பதவியை ராஜினாமா செய்துவிட்ட ஒரு பள்ளியில்‌ சேர்ந்து அங்கு கற்பிக்க ரம்பிக்கிறாரோ, அந்த தினத்தையே நான்‌ 'ஆசிரியர்களின்‌ ,தினமாக' அழைப்பேன்‌. அதுதான்‌ உண்மையான ஆசிரியர்கள்‌ தினமாக இருக்கமுடியும்‌!” “நீங்கள்‌ யோகா துறையைப்பற்றிப்‌ பெருமையடித்துக்‌ கொண்டிருப்பதை நான்‌ பலமுறை கேட்டிருக்கிறேன்‌. நீங்கள்‌ என்னவோ ஒரு மிகப்பெரிய காரியத்தை இந்த மனித சமுதாயத்திற்கு மிகவும்‌ பகுத்தறிவுடன்‌ செய்துவிட்டதாக எண்ணிப்‌ பெருமைப்பட்டுக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌. இப்போது எனக்கு அதற்கான அறிவுப்பூர்வமான ஆதாரங்கள்‌ வேண்டும்‌. பலவிதமான உருத்திரிந்த கோணங்களில் உடம்பை வளைத்துக்கொள்வதால்‌ மட்டும்‌ ஒரு மனிதனிடத்தில்‌ ஆன்மீக வளர்ச்சி ஏற்பட்டுவிடூமா? அது எப்படிப்‌ பயன்‌ தரப்போகிறது? இரண்டிற்கும்‌ என்ன தொடர்பு இருக்கிறது? அப்படி இந்த உருத்திரிந்த கோணங்களால்‌ ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது என்றால்‌, யோகாசனங்கள்‌ அனைத்தையும்‌ மிகச்சரியாகத்‌ தெரிந்து வைத்திருக்கும்‌ உங்கள்‌ யோகாத்துறையின்‌ தலைவர்‌, ஒரு கவுதமபுத்தரைப்‌ போலவோ அல்லது ஒரு மகாவீரரைப்‌ போலவோ ஒரு மிகப்‌பரிய ஞானியாகவல்லவா இருந்திருக்க வேண்டும்‌?”

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

குட்டு

  • ₹140


Tags: kuttu, குட்டு, மித்ரபூமி சரவணன், Sixthsense, Publications