மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும் வலிகளையும் எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்று எடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாகப் பதிவு செய்கின்றன இந்தக் கதைகள். அதே போலச் சற்றும் எதிர்பாராத வித்தியாசமான தளங்களில் இயங்கும் கதைகள். தன்னைக் கடந்து, தான் பார்க்கும் உலகம், மனிதர்கள், உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது. தன்னிலையில் சொல்லப்படும் உளவியல் பூர்வமான கதைகள் தமிழுக்குப் புதியவை அல்ல. லஷ்மி சிவக்குமாரின் கதைகளில் உளவியல் பார்வை இருந்தாலும் அவற்றை இந்த வரிசையில் அடக்கிவிட முடியாது. இதில் வேறொன்று இருக்கிறது. வேறுவிதமாக இருக்கிறது. உலுக்கிப் போட வைக்கின்றன. திடுக்கிட வைக்கின்றன.
மனதைப் பிசைகின்றன. இன்னும் என்னவெல்லாமோ செய்கின்றது இந்த எழுத்து. எப்படிப் புயலின் மூர்க்கத்திலும், சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பிலும் ஒரு வசீகரம் இருக்கிறதோ அதே வசீகரம் இந்தக் கதைகளிலும் இருக்கிறது.
- இரா. முருகவேள்
Tags: langoor, லங்கூர், லக்ஷ்மி சிவக்குமார், எதிர், வெளியீடு,