அழகான வீட்டைக் கட்டினாலும் நாம் வசிப்பது கூரைமேல் அல்ல. வீட்டின் உள்ளே உள்ள வெற்றிடத்தில்தான். அதேபோல் பானையிலுள்ள வெற்றிடம்தான் சமையல் செய்ய உதவுகிறது. சக்கரங்களின் இடையிலுள்ள வெற்றிடமே அதனைச் சுற்ற வைக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான பல சிந்தனைகளை எளிய கதைகள் மூலம் விளக்கிக் கூறுகிறது இப்புத்தகம்.பெரிய வேதனைகளைச் சந்திக்காதவர்கள் பெரிய சாதனைகளைச் செய்வதில்லை. வாழ்வில் தீவிரமான பற்றுக் கொண்டவர்களே சாவை எளிதில் ஏற்கின்றனர். ஒன்றை விரும்பாதவன் அதை எதிர்க்கப் போவதில்லை. ஆனால் தீவிரமாக ஒன்றை நேசிப்பவன்தான் அதைத் தீவிரமாக எதிர்க்கவும் செய்வான். லா வோ த்ஸூ கூறும் இந்த எதிர்மறையான கருத்துகள்தான் உலகின் இயல்பான நடைமுறை. இந்தச் சீன ஞானி கூறும் இக்கருத்துகள் யாவும் எல்லாக் காலத்துக்கும் எல்லா நாடுகளுக்கும் ஏற்றவையாக இருக்கின்றன.எந்த ஊரில் அதிகம் நோய்கள் பெருகி உள்ளனவோ அங்குதான் ஏராளமான மருத்துவர்களுக்கான தேவையும் இருக்கும். எங்கே களவு, குற்றங்கள் அதிகம் நிகழுமோ அங்குதான் காவல் துறையினர் அதிகம் இருப்பார்கள். எங்கே மக்கள் கூட்டம் நெறிதவறி, பாதை மாறி, தறிகெட்டு வாழ்கிறதோ அங்குதான் மகான்கள் அதிகம் உருவாகிறார்கள். இளவயதில் கெட்டுத் திரிந்தவர்கள்தான் நாளடைவில் பக்குவமடைந்து மிகப் பெரிய ஞானியாகின்றனர்.
லா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்
- Brand: குருஜி வாசுதேவ்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹222
Tags: lao, tsuvin, cheena, gnana, kathaigal, லா, வோ, த்ஸூவின், சீனஞானக், கதைகள், குருஜி வாசுதேவ், Sixthsense, Publications