டாக்டர் க.பழனித்துரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அங்கேயே ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்பு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தற்சமயம், பணி ஓய்வு பெற்று, பாண்டிச்சேரி அரவிந்தோ சொசைட்டி கிராமப்புற மேம்பாட்டு இயக்கத்தின் கௌரவ இயக்குனராக செயல்பட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக கிராமிய மேம்பாடு, உள்ளாட்சி அரசாங்கம், வளர்ச்சி நிர்வாகம், அடித்தட்டு மக்களாட்சி, சமூக மாற்றம், மேம்பாட்டு அரசியல் போன்ற துறைகளில் ஆய்வு செய்து 82 புத்தகங்களும் 168 ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். அத்துடன் 186 சமூகம் சார்ந்த கட்டுரைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் தினசரிப் பத்திரிகைகளிலும், மாத, வார இதழ்களிலும் எழுதியுள்ளார். மைய மாநில அரசின் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி தொடர்புடைய உயர்மட்டக் குழுக்களில் உறுப்பினராகச் செயல்பட்டு வந்துள்ளார். காந்திகிராம பல்கலைக் கழகத்தின் சமூகவியல் புலத்தலைவராகவும், மாணவர் நல புலத்தலைவராகவும், அரசியல் மற்றும் மேம்பாட்டு நிர்வாகவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர்.
ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கையின் பேராசிரியராக இருந்து 8000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மிகப் பெரிய அளவில் பயிற்சி அளித்துள்ளார். தமிழக ஊரக உள்ளாட்சிக்கான நிர்வாக வழிகாட்டிக் கையேட்டை தயாரித்து பதிப்பித்துள்ளார்.
சமூகம் சார்ந்த பல பிரச்னைகளை ஆய்வு செய்வதும், அரசுக்கு ஆலோசனை வழங்குவதும் தொடர் பணியாகச் செய்து கொண்டுள்ளார். பொதுத்தளத்தில் ஒரு சமூக ஆர்வலராகவும், பொதுக் கருத்தாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஜெர்மெனியிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆராய்ச்சிப் பணிக்காக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் கனடா, அமெரிக்கா, ஜெர்மெனி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், செனகல் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியவர்.
மாற்றுமுறை காண்போம்! - Maatrumurai Kaanpom
- Brand: க.பழனித்துரை
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹220
Tags: maatrumurai, kaanpom, மாற்றுமுறை, காண்போம்!, -, Maatrumurai, Kaanpom, க.பழனித்துரை, டிஸ்கவரி, புக், பேலஸ்