• மாயமான் வேட்டை-Maayamaan Vettai
மாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை. இந்தக் காலத்துக்கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல். அவதாரத்தின் அரிதாரம் தேர்தல். ஆ, அந்தச் சமயங்களில் மட்டும் அது எட்டிப்பார்க்கத் தவறுவதே இல்லை. பொய்க் கனவுகளைக் காண வைக்கிறது. வெற்று கோஷங்களை நம்பவைக்கிறது. இதோ, அதோ என்று அவதார புருஷர்களான வாக்காள ராமர்களை அலைக்கழித்துவிட்டுப் போயேவிடுகிறது. வண்ண வண்ணக் கனவுகளைச் சுமந்து கொண்டு, சொந்த தேசத்துக்கு வந்து சேரும் ஒருவனைத் துரத்தித் துரத்தி வேட்டையாடி அவனது அத்தனை கனவுகளையும் ஒன்று விடாமல் கலைத்துப்போடும் மாயமானின் சாமர்த்திய வேட்டையை இதில் நீங்கள் பார்க்கலாம். வா வா என்கிறது அரசியல். வந்து சேர்ந்தவன் படும் பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்நாவல், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து நிகழ்த்தியிருக்கும் இன்னொரு அசுரப்பாய்ச்சல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மாயமான் வேட்டை-Maayamaan Vettai

  • ₹300


Tags: maayamaan, vettai, மாயமான், வேட்டை-Maayamaan, Vettai, இந்திரா பார்த்தசாரதி, கவிதா, வெளியீடு