• Magic of Believing
உங்கள் மனத்தின் அதிசய சக்தியைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான கையேடு! கடந்த 70 ஆண்டுகளில் பத்து இலட்சம் பிரதிகள் விற்றுள்ள நூல்! கிளாடு எம். பிரிஸ்டல் எண்ணங்களின் இயல்பு மற்றும் ஆழ்மனத்தின் ஆற்றல் குறித்துச் சொந்தமாக ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டு இந்நூலை எழுதியுள்ளார். ஒருமித்தக் கவனக்குவிப்புடன்கூடிய சிந்தனை, மனக்காட்சிப்படைப்பு, ஆணித்தரமான நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் ஒருவரால் எந்தவோர் இலக்கை வேண்டுமானாலும் அடைய முடியும் என்பதை அவர் இந்நூலில் காட்டுகிறார். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உத்திகளைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கானோர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில்வாழ்க்கையையும் ஒரு மிகப் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளனர். அவர்களில், வாழ்க்கையில் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ள அறிவியலறிஞர்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற படைப்பாளிகளும் அடங்குவர். இந்நூலில் அவர்களைப் பற்றிய எடுத்துக்காட்டுகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. இதில் முன்மொழியப்பட்டுள்ள தத்துவம், உங்கள் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தை நிகழ்த்துவதற்கான ஒரு நல்ல தூண்டுகோலாக அமையும் என்பது உறுதி. மாயாஜாலங்களை நிகழ்த்துவதற்கான உங்களுடைய முறை இது!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Magic of Believing

  • ₹250


Tags: magic, of, believing, Magic, of, Believing, Claude M. Bristol (Translator) PSV Kumarasamy (Translator), மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்