கணேஷ் பாதியில் நிறுத்திவிட்டான். 'சம்திங் ராங்!' என்று அவன் மனத்துள் ஓர் எச்சரிக்கை ஒலித்தது. மிக அருகே வந்து விட்டான். செலவரங்கம் அவன் பேசியது எதையும் கேட்டவராகத் தோன்றவில்லை. அந்தப் பார்வை விலகவே இல்லை. மேலும் அவர் மூக்கு வழியாக ஓர் எறும்பு உள்ளே நுழைந்து கொண்டிருக்க, வாயோரத்தில் பழுப்பாக ஒரு திரவம் கசிந்துகொண்டிருந்தது.
Tags: malai, maaligai, மலை, மாளிகை-Malai, Maaligai, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்