மனதைப் பற்றி ஆராயும் நோக்கத்துடன் மனோதத்துவம், உளவியல், உடல்மொழி என்று பிரிவுகளில் பல ஆழமான, அறிவுசார் நூல்கள் வெளிவந்துள்ளன. இதிகாசங்களிலும் புராணங்களும்கூட மனத்தின் தன்மைகள் பற்றிப் பேசியிருக்கின்றன. மனதைப் பற்றிப் பேசக்கூடிய, மனதின் தன்மை பற்றிக் கேள்வி எழுப்புகின்ற பல பாத்திரங்கள் புராணங்களில் விரவிக்கிடக்கின்றன. ஆனால் இந்தப் புத்தகம் முற்றிலும் மாறுபட்டது. மனதைப் பற்றி மனத்தின் கண்ணோட்டத்திலிருந்தே எழுதப்பட்ட புத்தகம் இது. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், பல பன்னாட்டு நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். பலதரப்பட்ட பின்புலங்களிலிருந்து வருபவர்களுடன் அலுவல்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பழகிய அனுபவம் கொண்டவர். மனம் என்பதை ஒரு கருவியாகப் பார்க்கும் நூலாசிரியர், அந்த மனதை வெற்றியாளர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை சுவாரஸ்யமான சம்பவங்களின் வழியாக சுவையாகவும் ஆழமாகவும் பதிவுசெய்திருக்கிறார். ”எந்தக் கணினியும் நல்லக் கணினிதான் கையில் கிடைக்கையிலே. அது இன்பொருளாவதும், இடையூராவதும் அவரவர் பயன்பாட்டிலே.’ இது புதுமொழி. மனதுக்கும் பொருந்துகின்ற நன்மொழி. நம்முடைய மனம் மக்கர் செய்தால் அதற்கான மெக்கானிக்கை (மனோதத்துவ நிபுணர்) நாடாமல், நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ள (trouble shoot) முடியுமா?முடியும், அதற்கு, மனதோடு மனம்விட்டுப் பேச வேண்டும். அதுதான் மனதோடு ஒரு சிட்டிங்!
மனதோடு ஒரு சிட்டிங்!
- Brand: சோம வள்ளியப்பன்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹127
Tags: manadhodu, oru, sitting, மனதோடு, ஒரு, சிட்டிங்!, சோம வள்ளியப்பன், Sixthsense, Publications